விஜய் மீது போதைப்பொருள் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.. லியோ பாடலால் எழுந்த சர்ச்சை
பாடலால் சர்ச்சை
லியோ படத்தின் முதல் பாடல் 'நா ரெடி தான் வரவா' விஜய்யின் குரலில் அவருடைய பிறந்தநாள் அன்று வெளிவந்தது. இப்பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், சமூக ரீதியாக சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
அதற்கு காரணம் இந்த பாடலில் இடம்பெறும் வரிகள் தான். புகையிலை, போதைப்பொருள் போன்ற வார்த்தைகள் இந்த பாடலில் இடம்பெறுவதால் பலரும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என கண்டித்து வருகிறார்கள்.
இதை எப்படி விஜய் பாடலாம் என்றும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், ஆர் டி ஐ செல்வம் என்பவர் விஜய்யின் மீது புகார் அளித்துள்ளார்.
விஜய் மீது புகார்
இந்த புகாரில் லியோ படத்தில் இடம்பெறும் 'நா ரெடி தான் வரவா' பாடல் போதைப்பொருள் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர் டி ஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
மேலும் நடிகர் விஜய்யின் மீது போதைப்பொருள் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இதன்பின் என்ன நடக்க போகிறது என்று.
துணிவு படத்தின் சாதனையை முறியடித்த போர் தொழில்.. பிரம்மாண்ட வசூல் சாதனை

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
