விஜய்யின் லியோ படம் பார்த்து மன உளைச்சல், எனக்கு அபராதம் தர வேண்டும்- நீதிமன்றத்தில் வழக்கு
லியோ திரைப்படம்
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ்.
இவர் 2017ம் ஆண்டு தமிழில் மாநகரம் என்ற படத்தை இயக்கி தனது பயணத்தை பெரிதாக தொடங்கினார். அப்படம் பெரிய வெற்றியை கொடுக்க கைதி, மாஸ்டர், விக்ரம் கடைசியாக லியோ என்ற திரைப்படம் இயக்கி இருந்தார்.
Seven Screen Studio தயாரிக்க லோகேஷ் இயக்க விஜய்-த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
படக்குழு ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தவில்லை அதற்கு பதில் படத்தின் வெற்றி விழாவை படு கோலாகலமாக கொண்டாடினார்கள்.
புதிய வழக்கு
லியோ படம் பார்த்து தான் மிகவும் மன உளைச்சல் ஆகியுள்ளதால் ரூ 1000 அபராதம் தரவேண்டும், அதோடு லோகேஷை கண்டிப்பாக உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
பெண்களை எல்லா படங்களிலும் கொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் என மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.