Master Chef நிகழ்ச்சியில் நடந்த மோசடி, எழுந்த புகார்- புலம்பும் போட்டியாளர்கள்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக நடந்த நிகழ்ச்சிகளில் ஒன்று Master Chef. சன் தொலைக்காட்சியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 30 எபிசோடுகள் நடந்தது. ஹரிஷ், ஆர்த்தி, கௌஷிக் என 3 பேர் நடுவர்களாக நிகழ்ச்சியை கொண்டு சென்றார்கள்.
பிரம்மாண்டத்தின் உச்சமாக நிகழ்ச்சியில் அனைத்துமே பெரிய அளவில் இருந்தது. இந்நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு வின்னி, நித்தியா, தேவகி மற்றும் கிருத்திகா என 4 பேர் சென்றார்கள். இதில் தேவகி Master Chef பட்டத்தை வென்று சாதித்தார்.
இதன் 2ம் பாகம் வருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் நிலையில் முதல் சீசன் போட்டியாளர்கள் சிலர் புகார் எழுப்பியுள்ளனர்.
அதாவது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு அவர்கள் தரப்பில் செய்த போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை திருப்பி அளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மாஸ்டர் செஃப் குழுவினர் வாக்குறுதி தந்து இருந்தார்கள்.
ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுவரை சொன்னபடி பணம் தரவில்லையாம்.
அவர்களை சந்தித்த போதும் சரியான பதில் வரவில்லையாம்.
எனவே போட்டியாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் இந்த விஷயத்தை கூறி புலம்பி வருகிறார்கள்.