Con City திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் சிறுபட்ஜெட் காலம் போல, பல சிறு பட்ஜெட் படங்கள் மெகா ஹிட் ஆக, அந்த வரிசையில் ஹரிஷ் இயகத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு நடிப்பில் வெளிவந்துள்ள கான் சிட்டி-யும் இந்த வெற்றியை பெற்றதா? பார்ப்போம்.

கதைக்களம்
அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுகரசி கர்நாடகாவில் ஒரு ஹோட்டல் வைத்து குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அர்ஜுன் தாஸ், அன்னா பென்-க்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இந்த நிலையில் மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மாலை தாமதமாக அர்ஜுன் தாஸ் வர, பெரியப்பா என்று ஒருவர் அர்ஜுன் தாஸ் மகனை அழைத்து சென்று விடுகிறார்.

அவர் யார் என போலிஸிடம் புகார் கொடுத்து முகத்தை பார்க்க அந்த குடும்பத்துக்கே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
அதன் பிறகு இவர்கள் யர், உண்மையாகவே இவர்கள் குடும்பமா, அந்த குழந்தை யார், இவர்கள் எல்லாம் எப்படி ஒன்றினைந்தார்கள், குழந்தையை கடத்தி சென்றவர் யார் என பல குழப்பங்களின் விடையே இந்த கான் சிட்டி.

படத்தை பற்றிய அலசல்
அர்ஜும் தாஸ் சோலோ ஹீரோவாக ஒரு நல்ல கமர்ஷியல் களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அதிலும் ஏக்கம், வெறுப்பு அதனால் அவர் செய்யும் ஸ்கேம் என குட்டி லக்கி பாஸ்கராக மாறி கலக்குகிறார், ஆனாலும் அவரிடம் ஒரு இருக்கம் இருப்பதை அவர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அன்னா பென் அவர் செய்யும் வீடு ஸ்கேம், அதனால் பாதிக்கப்பட்டவர், அதை தொடர்ந்து ட்ரஸ்ட் வைத்து ஸ்கேம் செய்யும் யோகி பாபு, வடிவுகரசி என எல்லோரும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

அதிலும் வடிவுகரசி, யோகிபாபு கெமிஸ்ட்ரி தான் படத்தை பல இடங்களில் காப்பாற்றுகிறது, அதிலும் இரண்டாம் பாதியில் ஒரு ரிப்போர்ட்டர் வீடு சென்று போலி செய்தி பப்ளிஷ் செய்ய, எல்லோரும் செய்யும் திட்டம் அதில் வடிவுகரசி, யோகிபாபு கலக்கி எடுத்துள்ளனர்.
இப்படி படத்தில் எல்லோரும் நன்றாக நடித்திருந்தாலும் களம் சூடாக இருந்தாலும், காட்சிகள் எல்லாம் பழைமையாகவும் எக்கசக்க லாஜிக் ஓட்டைகள் இருந்து படம் திரைக்கதையில் தடுமாறுகிறது.

அதிலும் டோல்கேட் திறப்பது போல் ஒரு காட்சி, அநியாய லாஜிக் ஓட்டை, ஒரு ஸ்கேம் கதை, கண்டிப்பாக அடுத்தடுத்த காட்சி மிகப்பெரிய அளவில் சூடு பறக்க வேண்டாமா, முதல் பாதியில் அர்ஜுன் தாஸ் EB ஆபிசில் இருந்த பரபரப்பு எல்லா இடத்திலும் இருந்திருக்கலாம்.
அதோடு அந்த போலிஸ் வில்லன் கதாபாத்திரம் டிபிக்கள் 90ஸ் வில்லன் ரோல். டெக்னிக்கலாக படம் வலுவாக உள்ளது, அதிலும் படத்தின் ஒளிப்பதிவு சூப்பர், சாம் ரோல்டன் பின்னணி இசை பிராமதம், ஆனால் பாடல்கள் கவனம் ஈர்க்க வில்லை.
க்ளாப்ஸ்
அர்ஜுன் தாஸ், வடிவுகரசி, யோகிபாபு, அன்னா பென் நடிப்பு
முதல் பாதி
டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
இராண்டாம் பாதி இன்னும் சுவாரஸ்ய களமாக இருந்திருக்கலாம்
லாஜிக் மீறல்கள்
மொத்தத்தில் கான் சிட்டி அனல் பறக்கும் களம் இருந்தும் காட்சிகள் பார்த்து பழகிபோன திரைக்கதை ஆவரேஜ் வாட்ச் ஆக அமைகிறது.

இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu