சமந்தா திருமணத்திற்கும் நயன்தாராவின் திருமணத்திற்கும் உள்ள சம்மந்தம் இதுதான்.. அதற்கு இவர் தான் காரணம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுக்க நயன்தாரா கழுத்தில் கட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு மணிரத்னம், சூர்யா, அஜித், கார்த்தி, ஜோதிகா, அனிருத், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், சிவா, ஹரி என பலரும் வந்திருந்தனர்.

மேலும், தனது திருமண புகைப்படத்தை விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியுடன் சில மணி நேரங்களுக்கு முன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த புகைப்படங்களை ஜோசப் ராதிக் எனும் பிரபல போட்டோகிராபர் எடுத்துள்ளார். இவர் வட இந்தியளவில் நடைபெற்ற பல முன்னணி பிரபலங்களின் திருமணத்தை புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், நயன்தாரா திருமணத்திற்கு போட்டோகிராபராக பணிபுரிந்துள்ள இவர், இதற்கு முன் 2017ல் நடைபெற்ற நயன்தாராவின் தோழியான சமந்தாவின் திருமணத்திலும் போட்டோகிராபராக பணிப்புரிந்துள்ளார்.

2017ல் திருமணம் செய்துகொண்ட சமந்தா கடந்த ஆண்டு தனது முன்னாள் கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu