மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் உடல் மீது துப்பினாரா நடிகர் ஷாருக்கான்- பரபரப்பான விஷயம்

death singer shahrukhkhan latamangeshkar
By Yathrika Feb 07, 2022 10:35 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் நேற்றைய தினம் ஒரு துக்க விஷயம் நடந்தது. ஏன் மத்திய அரசே அந்த பிரபலத்தின் மரணத்தால் இரண்டு நாள் துக்கம் அனுசரித்துள்ளனர்.

பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

92 வயதான அவரது இறுதி ஊர்வலம் அரசின் முழு மரியாதையோடு தகனம் செலுத்தப்பட்டது.  அப்போது நடிகர் ஷாருக்கானும் அவரது உடல் முன்பு நின்று பிரார்த்தனை செய்தார். அந்த வீடியோ வெளியாக ஷாருக்கான், லதா உடல்மீது துப்பியுள்ளார் என ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்த வந்த ஷாரூக் கான் துவா (பிரார்த்தனை) செய்தார்.

அப்போது வழக்கமாக இஸ்லாமிய முறைப்படி குரான் வசனம் ஒன்றை கூறி அதை அவர்களுக்கு செல்லும் வகையில் ஊதுவது வழக்கம். அதை தான் ஷாரூக் கான் செய்திருந்தார், தவறாக பேச வேண்டாம் என சிலர் பதிவு செய்து வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US