குக் வித் கோமாளி 2 வெற்றிக் கொண்டாட்டம் எப்போது தெரியுமா?- ரசிகர்களே பார்க்க தயாரா?
விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் படு பிரபலமாக ஓடியது.
இரண்டாவது சீசனில் பங்குபெற்ற பலருக்கும் இப்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்துள்ளது. புகழ், ஷிவாங்கி, அஷ்வின் என அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் குக் வித் கோமாளி 2 குழுவினர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர், அதுதான் வெற்றிக் கொண்டாட்டம்.
நிகழ்ச்சி படப்பிடிப்பு செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது, நாமும் பார்த்தோம். தற்போது இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 8ம் தேதி அதாவது அடுத்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.