குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம்- முழு விவரம் இதோ
குக் வித் கோமாளி 4
விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4.
சமையல் கொஞ்சம் கலாட்டா அதிகம் என புதுவித கான்செப்டுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.
இதில் ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி காளையன் முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டனர்.
இறுதிப்போட்டிக்கு மைம் கோபி, விசித்ரா, கிரண், சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் தேர்வாக இறுதிச் சுற்றும் படமாக்கப்பட்டு வரும் வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த 4வது சீசன் டைட்டிலை மைம் கோபி அவர்கள் தட்டிச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது, நிகழ்ச்சியிலும் காண்போம்.
சம்பள விவரம்
இந்த நிலையில் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்காக பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்ற விவரம் வந்துள்ளது. இதோ,
- சிவாங்கி- ரூ. 20 ஆயிரம்
- விஜே விஷால்- ரூ. 25 ஆயிரம்
- ராஜ் அய்யப்பா- ரூ. 26 ஆயிரம்
- விசித்ரா- ரூ. 30 ஆயிரம்
- ஷெரின்- ரூ. 35 ஆயிரம்
- சிருஷ்டி, ஆண்ட்ரியன்- ரூ. 30 ஆயிரம்
- மைம் கோபி- ரூ. 40 முதல் 50 ஆயிரம்