பாக்கியலட்சுமி சீரியல், பிக்பாஸ் பிரபலங்கள் குக் வித் கோமாளி போட்டியாளர்களா?- யார் யார் பாருங்க
விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்துவிட்டது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இப்போது இந்நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.
நிகழ்ச்சியின் புரொமோ எப்போதோ வெளியாகிவிட்டது, இதில் கோமாளிகள் பற்றிய விவரம் வெளியானது. சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள், புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.
போட்டியாளர்கள் விவரம்
தற்போது போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதில் பாக்கிய லட்சுமி சீரியல் பிரபலம் விஷால், பிக்பாஸ் புகழ் ஷெரின், கோமாளியாக இத்தனை நாட்கள் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவாங்கி போன்றோர்கள் போட்டியாளர்களாக வருகிறார்களாம்.
தனது காதலரை முதன்முறையாக அறிமுகப்படுத்த போகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா- இதோ புகைப்படம்