குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் Chef Of The Week வாங்கியது யார் தெரியுமா?
குக் வித் கோமாளி 5
விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட்டான ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
முதல் சீசன் கொடுத்த பெரிய வரவேற்பு தான் இப்போது 5வது சீசன் வரை வந்துள்ளது. முதல் 2 சீசன்கள் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது, ஆனால் 3 மற்றும் 4வது சீசன்களில் நிறைய புதிய மாற்றங்கள் நடைபெற்றது.
திருமணம் ஆகி 2 வருடத்தில் உயிரிழந்த பாக்யராஜ் முதல் மனைவி யார் தெரியுமா?- இந்த படங்களில் அவர் நடித்துள்ளாரா?
இப்போது தொடங்கப்பட்டுள்ள 5வது சீசன் குறித்து சொல்லவே வேண்டாம். தயாரிப்பாளர், இயக்குனர், நடுவர், கோமாளிகள் என நிறைய மாற்றங்கள் இந்த 5வது சீசனில் நடந்துள்ளது.
முதல் வாரம்
நேற்று ஏப்ரல் 27, 5வது சீசனின் முதல் எபிசோடு ஒளிபரப்பானது. ஆரம்பமே நல்ல அமர்க்களமாக தான் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் முதல் வாரம் Chef Of The Week வாங்கியவர் குறித்து தகவல் கசிந்துள்ளது. முதல் வாரமே நடுவர்களை அசத்தி அந்த பட்டத்தை பெற்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதா தானாம்.