குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. இதோ அந்த லிஸ்ட்
குக் வித் கோமாளி 5
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 5. வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்கும் இந்த நிகழ்ச்சி இந்த வருடம் சற்று தள்ளிப்போனது.
செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த குழு, இயக்குனர் உள்ளிட்டோர் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியுள்ளனர். இதுவும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் எதற்காக வெளியேறினார் என காரணம் தெரியவில்லை.
குக் வித் கோமாளி சீசன் 5 படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. அங்கிருந்து எடுக்கப்பட்ட குக் வித் கோமாளி செட் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொண்டிருக்கும் 8 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
போட்டியாளர்கள் லிஸ்ட்
தொகுப்பாளினி பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, Youtuber இர்ஃபான், வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த், இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என உறுதியாக கூறப்படுகிறது.
You May Like This Video

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
