ரசிகர்களின் பேவரெட் குக் வித் கோமாளி பிரபலம் பிக்பாஸ் 9 கலந்துகொள்கிறாரா?... யாரு பாருங்க, உண்மை விவரம்
குக் வித் கோமாளி
ஏன் டா சமையல் மட்டும் காட்டனும் நம்ம ஜாலியா காட்டலாம் என புதிய கான்செப்டில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
முதல் சீசனிற்கு கிடைத்த பெரிய வரவேற்பு இப்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
5வது சீசன் முதல் நிகழ்ச்சியில் நிறைய மாற்றங்கள், எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த 6வது சீசன் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.
பிக்பாஸ் 9
சமையல் நிகழ்ச்சி ஒருபக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க இன்னொரு பக்கம் பிக்பாஸ் 9 நிகழ்ச்சி பற்றி நிறைய தகவல்கள் வலம் வர தொடங்கியுள்ளது.
அதில் முக்கியமாக குக் வித் கோமாளி 6 சீசனில் உள்ள போட்டியாளர்கள் சிலர் பிக்பாஸ் வரப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
உமைர், ஷபானா போன்றோர் பெயர்கள் அடிபட, அண்மையில் ரசிகர்கள் சீரியல் நடிகை ஷபானாவிடம் இன்ஸ்டாவில் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் பிக்பாஸ் செல்லவில்லை என பதில் கூறியுள்ளார். இதோ அவரது பதிவு,