ஒரே நாளில் வெளியாகும் குக் வித் கோமாளி பிரபலங்களின் இரண்டு படங்கள்..
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட, இரண்டாவது சீசன் படுசூப்பர்ஹிட்டானது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் தற்போது திரைத்துறையில் கால்பதிக்க துவங்கிவிட்டனர்.
ஆம், இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த புகழ் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராகிவிட்டார். அதே போல், ஷிவாங்கியும் படங்களில் நடிகையாகவும், பின்னணி பாடகியகவும் வாய்ப்புகளை பெற்றுள்ளார்.
இவர்களை தொடர்ந்து என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். அதே போல் சதீஸ் ஹீரோவாக நடித்துள்ள நாய் சேகர் படத்தில் பவித்ர லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அஸ்வின் ஹீரோவாக நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் படமும். பவித்ரா ஹீரோயினாக நடித்துள்ள நாய் சேகர் படமும் ஒன்றாக நாளை வெளியாகவுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இரு நபர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதை, ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.