குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியின் புதிய நடுவர் ரோஜாவின் பிரம்மாண்ட வீடு.. விஜய் டிவி வெளியிட்ட வீடியோ

By Kathick Mar 31, 2026 08:00 AM GMT
Report

குக் வித் கோமாளி 7

சின்னத்திரையில் மாபெரும் உச்சத்தை தொட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. ஆனாலும், குக் வித் கோமாளி சீசன் 7 எப்போது ஆரம்பம் ஆகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டது.

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியின் புதிய நடுவர் ரோஜாவின் பிரம்மாண்ட வீடு.. விஜய் டிவி வெளியிட்ட வீடியோ | Cook With Comali Actress Roja House Video

குக் வித் கோமாளி சீசன் 7ல் வழக்கமாக தனியாக போட்டியாளர்கள் களமிறங்கவில்லை. அதற்கு பதிலாக, நட்சத்திர ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறங்குகிறார்கள். அனிருதா ஸ்ரீகாந்த் - சம்யுக்தா, கானா - வினோத் பாக்கியா, அரவிந்த் - சங்கீதா என ஜோடி ஜோடியாக போட்டியாளர்களை விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறக்கியுள்ளது.

ரோஜாவின் பிரம்மாண்ட வீடு

நட்சத்திர ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறங்குவது புதிய விஷயம் என்றால், அடுத்ததாக இந்த சீசனில் மொத்தம் நான்கு நடுவர்கள் என புதிதாக அறிவித்தனர். அந்த நான்காவது நடுவர் வேறு யாருமில்லை, நடிகை ரோஜா என அதன்பின் அறிவித்தனர்.

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியின் புதிய நடுவர் ரோஜாவின் பிரம்மாண்ட வீடு.. விஜய் டிவி வெளியிட்ட வீடியோ | Cook With Comali Actress Roja House Video

எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ

எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 7ல் நடுவராக களமிறங்கியுள்ள நடிகை ரோஜாவுக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில், ரோஜாவின் வீட்டிற்கு சென்று பேட்டி எடுத்துள்ளனர். தனது வீட்டை அவர் சுற்றி காட்டி சாப்பாடு, சமையல் குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மேலும், வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 7 தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US