பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளவுள்ள குக் வித் கோமாளி பிரபலம், யார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் இந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளவர் தான் கனி.
கனி தற்போது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி செமி பைனல்ஸ் வரை சென்றுள்ளார். மேலும் அவருடன் பாபா பாஸ்கர், அஸ்வின், ஷகிலா உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சியின் மற்றுமொரு பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கனி கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பிக்கவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள கனியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி பிரபல நடிகர் நகுலிடம் கூட பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu