குக் வித் கோமாளி முக்கிய எபிசோடை திடீரென நீக்கிய ஹாட் ஸ்டார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து வந்த பைனல்ஸ் நிகழ்ச்சி குக் வித் சீசன் 2-வில் விரைவில் நடைபெறவுள்ளது.
இதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு காத்துகொண்டு இருக்கின்றனர். மேலும் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் Celebration Week நடைபெறவுள்ளது, இதனால் அடுத்த வாரம் பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேலும் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எபிசோடை காலையிலே ஹாட் ஸ்டாரில் வெளியிடுவார்கள். இதனை ஹாட்ஸ்டாரின் VIP பயனார்கள் மட்டும் கண்டுகளிக்க முடியும்.
அந்த வகையில் இன்றைய எபிசோடை காலையில் தனது தளத்தில் பதிவேற்றியிருந்த ஹாட் ஸ்டார் திடீரென அதனை நீக்கியுள்ளது.