சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்- அட இவரா?
விஜய் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 2வது சீசன் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பானது.
முதல் சீசனை விட இரண்டாவது சீசன் செம ஹிட், அதில் பங்குபெற்ற பலருக்கு இப்போது சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதிலும் புகழுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அவரின் இந்த வளர்ச்சிக்கு அனைவருமே மனதார பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் சூரிக்கு நேற்று பிறந்தநாள், எல்லோரும் வாழ்த்து கூறி வந்தார்கள். சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவர் படக்குழு சூரி பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக அதில் புகழ் மற்றும் தங்கதுரை நடித்து வருவது தெரியவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்,

இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu