குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி...
குக் வித் கோமாளி
ஆதித்யா வர்மா திரைப்படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாக நடித்திருந்தவர் தான் அஷ்வின்.
அந்த படத்தை விட அஷ்வினுக்கு சினிமாவில் பெரிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
அந்நிகழ்ச்சியில் கோமாளி இருந்த பாடகி சிவாங்கி அஸ்வினே அஸ்வினே என அழைத்து செய்த கலாட்டா எல்லாம் அந்த சீசனின் ஹைலைட் என்றே கூறலாம். இந்நிகழ்ச்சி மூலம் அஷ்வினுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

நிகழ்ச்சி ஹிட் கொடுத்த அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தவர் செம்பி, ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா, மீட் க்யூட், ஹாட் ஸ்பார்ட் 2 மச் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

யார் இவர்
ரசிகர்களுக்கு அஷ்வினை குக் வித் கோமாளி பிரபலம், நடிகர் என்று தான் தெரியும். ஆனால் இவர் பழம்பெரும் நடிகரின் பேரன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அதாவது இவர் பழம்பெரும் நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் பேரன் ஆவார்.

திருமணம்
அடுத்தடுத்து படங்கள், Independent பாடல்களில் நடித்துவந்த அஷ்வினுக்கு இப்போது திருமணம் நடக்க உள்ளது. அதாவது நாளை (நவம்பர் 20) அஷ்வினுக்கும் புவனேஷ்வரி என்பவருக்கு கோயம்புத்தூரில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புவனேஷ்வரி மறைந்த இயக்குனர் ராஜ சேகரின் பேத்தி என்றும் கூறப்படுகிறது. ராஜசேகர், கமல் நடித்த விக்ரம், ரஜினியின் படிக்காதவன், தம்பிக்கு எந்த ஊரு, காக்கிச்சட்டை போன்ற வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார்.