குக் வித் கோமாளி 3 புகழ் கிரேஸிற்கு இத்தனை சொந்த ஹோட்டல்கள் உள்ளதா?- அவரே கூறிய விஷயம்
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் கருணாஸ். இவர் நடிப்பதை தாண்டி இசையமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தினார். ஒரு அரசியல்வாதியாகவும் கருணாஸ் மும்முரமாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கிரேஷ் சிறந்த பாடகியாவார். இப்போது கிரேஸ் பாடுவதில்லை அதற்கு பதில் விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
தற்போது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார்.
கிரேஸ் கொடுத்த பேட்டி
அண்மையில் கிரேஸ் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து ஒரு பேட்டி அளித்தார். அப்போது தான் வைத்திருக்கும் ஹோட்டல்கள் குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், ஹோட்டல் நடத்தலாம் என்று எங்களை விட கருணாஸிற்கு தான் அதிக ஆர்வம். முதலில் நாங்கள் வடபழனியில் லொடுக்கு பாண்டி என்ற ஹோட்டல் நடத்தினோம்.
அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூர், கரூரில் திண்டுக்கல் சாரதி என்ற ஹோட்டல் நடத்தி வந்தோம். அதன்பிறகு கருணாஸ் ரத்ன விலாஸ் என்ற ஹோட்டல் திறந்தார். சினிமாவிற்கு பிறகு ஆரம்பத்தில் இருந்தே கருணாஸிற்கு வேறொரு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம், அது ஹோட்டல் தான் என்றும் உறுதியாக இருந்தார் என கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமாவின் மகனா இது?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, போட்டோ இதோ