குக் வித் கோமாளி, KPY நிகழ்ச்சி புகழ் பாலாவுக்கு அடித்த ஜாக்பாட்... வாழ்த்தும் ரசிகர்கள்
KPY பாலா
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வந்தவர் பாலா.
கலக்கப்போது யாரு நிகழ்ச்சி அவருக்கு நல்ல புகழ் கொடுக்க Kpy பாலா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அந்நிகழ்ச்சியில் இருந்து குக் வித் கோமாளி பக்கம் வந்தவர் செம ரைமிங் காமெடி செய்து பெரிய அளவில் புகழ் பெற்றார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து அப்படியே நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தவர் தன்னை மக்களுக்கு சேவை செய்யும் நபராக மாற்றிக்கொண்டார்.
சமீபத்தில் கூட காது கேட்காத குழந்தைகள் பலருக்கு மிஷின் வாங்கி கொடுத்துள்ளார்.
தான் செய்யும் உதவிகளை இன்ஸ்டாவில் பதிவிட்டதால் அதைப்பார்த்த பலரும் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் என ஒரு மேடையில் பாலா கூறியிருந்தார்.
ஜாக்பாட்
சின்னத்திரையிலேயே பெரிய அளவில் வளர்ந்து வந்த பாலாவுக்கு இப்போது வெள்ளித்திரையில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது அவர் ரணம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் பாலா நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
