அட்டகாசமாக வந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆரம்ப நாள்- புரொமோவுடன் வந்த சூப்பர் தகவல்
குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது, அதில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா என்ற கான்செப்டில் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனிற்காக தான் ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.
4 சீசன்களில் வந்தவர்கள், புதியவர்கள் என குக் வித் கோமாளி 5 நிறைய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர், தயாரிப்பாளர், புதிய நடுவர்கள் என நிறைய இந்த 5வது சீசனில் புதுசு.
ஆரம்ப நாள்
இதுநாள் வரை நிகழ்ச்சி வரப்போகிறது என்பதற்கான புரொமோக்கள் வெளியாகி வந்த நிலையில் முதல் எபிசோட் என்று தொடங்குகிறது என்ற அறிவிப்பு அட்டகாசமான புரொமோவுடன் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 5, ஏப்ரல் 27 முதல் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் இரவு 9.30 என்று ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.