குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் இந்த வார கெட்டப்பில் குடும்பமாக எடுத்த இந்த அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா?
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் வந்ததன் மூலம் ரசிகர்களிடம் ரீச் ஆனது. பாடல், நடன நிகழ்ச்சி என அவர்கள் வித்தியாசமாக கொடுத்து மக்களின் ஆதரவை பெற்றார்கள்.
அப்படி அவர்கள் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை தொடங்கி அதில் வெற்றிக்கண்டது குக் வித் கோமாளி 2 தான்.
சமையல் முக்கியமாக இருந்தாலும் கோமாளிகள் செய்யும் காமெடி தான் மக்களிடம் அதிகம் பேசப்படுகிறது. வெள்ளிக்கிழமை வந்தாலே ஹாட் ஸ்டாரில் நிகழ்ச்சியை ஆர்வமாக காண்கின்றனர்.
அப்படி ஒரு பெரிய கிரேஸ் மக்களுக்கு உள்ளது. தற்போது இந்நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, எனவே நிகழ்ச்சி முடியப் போகிறது என்ற வருத்தத்தில் மக்கள் ஏற்கெனவே உள்ளனர்.
தற்போது இந்த வைல்ட் கார்டு என்ட்ரீ நடக்க இருக்கிறது. நிகழ்ச்சியில் வெளியேறிய அனைவரும் இந்த வாரம் வருகின்றனர், புரொமோக்கள் ஏற்கெனவே வெளியாகி கலக்கி வருகிறது.