குக் வித் கோமாளி புகழால் ஏற்பட்ட விபரீதம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ்.
இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நகைச்சுவையான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை சம்பாதித்து தந்தது.
ஆம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தற்போது பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் புகழ், கடை திறப்பு விழாவிற்கு விருந்தினராக சென்றுள்ளார். அங்கே இவரை பார்க்க பெரும் அளவில் கூட்டம் கூடி சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கடைக்கு காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் புகழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.