குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னர் இவர் தானா - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் வித்யாசமான முறையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் மனதில் உடனடியாக இடம்பிடித்துவிட்டது.
அதுமட்டுமின்றி, புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்ட பலரின் நகைச்சுவைகளும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிகமுக்கியமான ஒரு காரணம்.
இதனால் இந்த தமிழில் வெற்றியடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளனர்.
செமி பைனல் எபிசோடில் கனி, பாபா பாஸ்கர், அஸ்வின் என மூன்று நபர்கள் பைனலுக்கு சென்றிருந்த நிலையில், வைல்ட் கார்ட் எபிசோடில் பவித்ரா, ஷகீலா என மொத்தம் ஐந்து நபர்கள் குக் வித் கோமாளி சீசன் 2வின் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதில் குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னர் பாபா பாஸ்கர் தான், என ரசிகர்கள் சமூக வளைத்ததில் பெரிதும் நம்பிக்கையாக கூறி வருகின்றனர்.
மேலும் அஸ்வினும் வெற்றிபெற பெரிதும் வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
எதுவாக இருந்தாலும், பொறுத்திருந்து பார்ப்போம், இந்த வாரத்தின் இறுதி எபிசோடிற்காக.