குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளர்கள் லிஸ்ட் ! இத்தனை பிரபலங்களா ?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதன் இரண்டு சீசன்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இதனிடையே குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் மிக விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ப்ரோமோவும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி சீசன் 3-ல் போட்டியாளர்களாக
- கிரேஸ் கருணாஸ்
- நடிகர் சந்தோஷ் பிரதாப்
- மனோபாலா
- அந்தோணி தாசன்
- வித்யுலேகா ராமன் உள்ளிட்டோர் போட்டியாளராக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் புதிய கோமாளியாக குரேஷி, மூக்குத்தி முருகன், சூப்பர் சிங்கர் பரத் உள்ளிட்டோர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.