வெளியே கசிந்த குக் வித் கோமாளி 6 போட்டியாளர்களின் லிஸ்ட்.. சன் டிவி இந்த சீரியல் நடிகையும் உள்ளாரா?
குக் வித் கோமாளி 6
யப்பா சிரிக்க முடியலை வயிறு வலிக்கும் நிறுத்துங்கள் என்ற சொல்லும் சிரிப்பின் உச்சம் என்ற அளவிற்கு ஒளிபரப்பாகி வந்த ஷோ குக் வித் கோமாளி.
முதல் சீசன் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தயாராகி ஒளிபரப்பாக செம ரெஸ்பான்ஸ், இதனால் அடுத்தடுத்த சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
ஆனால் கடந்த 5வது சீசனில் தான் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது, இதனால் ஒருவர் இந்த தொலைக்காட்சி விட்டே சென்றுவிட்டார். இதெல்லாம் மக்களுக்கு தெரிந்த கதை தான்.
போட்டியாளர்
வரும் மே 4ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளது. இந்த புதிய நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் போட்டியிடும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வந்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை மதுமிதா, இவர் இப்போது விஜய்யில் அய்யனார் துணை என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளியின் ஒரு போட்டியாளர்.
அதேபோல் சன் டிவியின் மூன்று முடிச்சு தொடரில் டெர்ரரான நபராக நடித்து வரும் ப்ரீத்தியும் ஒரு போட்டியாளர் என கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் பிரேமலதா? விஜய பிரபாகருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி IBC Tamilnadu
