குக் வித் கோமாளி 7வது சீசனில் என்ட்ரி கொடுக்கும் பிரபல கோமாளி.... யார் தெரியுமா?
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ என்று சொன்னாலே முதலில் ரசிகர்களுக்கு இப்போது நியாபகம் வரும் நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி.
கடந்த ஏப்ரல் 4ம் தேதி குக் வித் கோமாளி 7வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ஒளிபரப்பாக தொடங்கியது.

மாகாபா ஆனந்த் மற்றும் சோயா புதிய தொகுப்பாளர்களாக களமிறங்க செப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கௌசிக் ஷங்கர் ஆகியோருடன் புதிய நடுவராக நடிகை ரோஜா இந்த 7வது சீசனில் களமிறங்கியுள்ளார்.
Double Trouble என கூறப்படும் இந்த 7வது சீசனில் போட்டியாளர்கள் ஜோடியாக பங்குபெறுகிறார்கள்.
கோமாளி
புதிய ரூல்ஸ், புதிய கோமாளிகள், புதிய நடுவர் என பல மாற்றங்களுடன் 7வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்நிகழ்ச்சி குறித்து வந்த தகவல் என்னவென்றால், இதற்கு முந்தைய சீசன்களில் கோமாளியாக கலக்கிவந்த குரேஷி என்ட்ரி கொடுக்கிறாராம். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சூப்பர் காமெடியன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
