குக் வித் கோமாளி 7வது சீசனில் எல்லாமே புதுசு... அட்டகாசமான தகவல்
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
அதற்கு ஏற்றார் போல் விஜய்யில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் வந்துகொண்டிருக்கிறது, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது சீரியல்களிலும் விஜய் டிவி கெத்து காட்டி வருகிறார்கள், டிஆர்பியிலும் மாஸ் காட்டுகிறார்கள்.
அப்படி விஜய் டிவியில் மிகப்பெரிய ஹிட் ஷோவாக அமைந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. சமையல் கொஞ்சம் காமெடி அதிகம் என்ற கான்செப்டுடன் 6 சீசன்கள் வரை வெற்றிகரமாக ஓடியது.

7வது சீசன்
கடந்த வருடம் 6வது சீசன் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஆரம்பித்ததுமே 7வது சீசன் பற்றிய பேச்சுகள் ரசிகர்களிடம் எழும்பிவிட்டது. இப்போது குக் வித் கோமாளி 7வது சீசன் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இந்த 7வது சீசனில் புதிய கோமாளிகள், போட்டியாளர்கள் இடம்பெற உள்ளார்களாம். இதுதவிர புதிய தகவல் என்னவென்றால் நடுவர்களும் மாற்றப்பட்டுள்ளார்களாம். இந்த 7வது சீசனில் ஸ்டைலிஷ் செப் வினோத் குமார் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.