முதலில் கையில் காயம், இப்போது கார் விபத்து என சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்- யார் தெரியுமா?
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. முதல் சீசன் கொடுத்த பிரபலம் அடுத்தடுத்து 2,3 சீசன்களும் ஒளிபரப்பானது.
தற்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இதன் கடைசி நிகழ்ச்சியின் ஷுட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் வெற்றியாளர் யார் என்ற விவரம் மட்டும் இன்னும் கசியவில்லை.
ஆனால் ஷிவாங்கி அல்லது ஆண்ட்ரியா இருவரில் ஒருவர் தான் வெற்றியாளராக இருப்பார் என மட்டும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

விபத்தில் சிக்கிய பிரபலம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட பிரபலங்களில் ஒருவர் தான் சக்தி. இவருக்கு அண்மையில் தான் கையில் அடிபட்டு கட்டுடன் சில வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
இப்போது என்னவென்றால் சென்னை சென்ட்ரல் அருகில் காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பேருந்து தன்னுடைய காரை உருசியபடி வந்து இடித்துவிட்டது. இதனால் என்னுடைய தலையில் அடிபட்டு விட்டது.
இருப்பினும் என்னுடைய செல்லும் அளவிற்கு காயம் ஏற்படவில்லை என்று இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறிவந்த நிலையில் தற்போது வீடியோவை நீக்கியுள்ளார்.

விஜய் டிவி சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு வந்த சூப்பர் செய்தி- கொண்டாட்டத்தில் பேன்ஸ்