சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி சிவாங்கி - கடுப்பான ரசிகர்கள், காரணம் இதுதானா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருபவர் சிவாங்கி.
சென்ற வாரம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மதுரை முத்து நகைச்சுவை ஒன்று கூற அதற்கு அவரை அவமப்படுத்தும் படி பேசிவிட்டார் என கூறுகின்றனர்.
அந்த நிகழ்ச்சியில் சிவாங்கியிடம், மதுரை முத்து, ' நீ ஏழு கட்டையில் பாடு, அவன் வெளக்கமாத்து கட்டை எடுக்கட்டும் ' என்பது போல் நகைச்சுவை கூறியுள்ளார்.
இதற்கு சிவாங்கி ' தொடப்பக்கட்டையாலா அடிச்சுருவேன் ' என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
ஆனால் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், என்னதான் நகைச்சுவையாக இருந்தாலும், மதுரை முத்துவை இப்படி நீங்கள் கூறியிருக்க கூடாது என்று கடுப்பாகியுள்ளனர் ரசிகர்கள்.