தல, தளபதியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம்.. ஆனால் ஷிவாங்கி கிடையாது..
டாக்டர், அயலான் திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக காத்திருக்கும் திரைப்படம் டான்.
இப்படத்தின் மூலம் சிபி சக்ரவத்தி என்பவர் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.
மேலும் டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்.ஜெ.சூர்யா, பிரியா அருள் மோகன், மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி என பலரும் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் மற்றொரு குக் வித் கோமாளி பிரபலம் புகழ் நடிக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
குக் வித் கோமாளி புகழ், தல அஜித் நடிக்கும் வலிமை மற்றும் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 என இரு திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் எனவும் இதுவரை தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.