மொத்தமாக அகற்றப்பட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செட், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய புகைப்படம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.
மேலும் கடைசியாக நடந்த குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்தது.
இதில் கனி முதல் இடத்தை பிடித்தார், அவரை தொடர்ந்து ஷகீலா, அஸ்வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் அண்மையில் நடந்த Mr & Mrs. சின்னத்திரை 2-வில் குக் வித் கோமாளி செட்டில் போட்டி நடத்தப்பட்டது.
மேலும் தற்போது குக் வித் கோமாளி செட் மொத்தமாக அகற்றப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கவலையில் உள்ளனர், மேலும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாகவும் கூறிவருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.