பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளும் குக் வித் கோமாளி நட்சத்திரத்தின் மகள், யாரும் எதிர்பார்க்காத என்ட்ரி
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ், வருடம் தோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4-ல் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை வென்றார். அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ், ரியோராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
மேலும் அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் இப்போதே இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 கலந்து நட்சத்திரங்கள் குறித்த பல்வேறு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷகீலாவின் மகளான மிலா பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஷகீலாவின் வளர்ப்பு மகள் திருநங்கையான மிலா பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்ட தகவல் என்றும் இணையத்தில் கூறிவருகின்றனர்.