ஒரு நொடி இதய துடிப்பே நின்றுவிட்டது, ரசிகர்கள் செயலால் குக் வித் கோமாளி அஷ்வின் ஷாக்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரின் பேவரட் நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது. அதிலும் கடந்த சீசனில் அஷ்வின், சிவாங்கி, புகழ், ஷகிலா என பலருக்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அஷ்வின், சிவாங்கி ஜோடிக்கு பெரியளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள், இந்நிலையில் அஷ்வின் தற்போது தன் பட வேலைகளில் பிஸியாகவுள்ளார்.
சிவாங்கியும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அஷ்வின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலை ஷேர் செய்து ‘என் இதய துடிப்பே நின்று விட்டது’ என கமெண்ட் செய்துள்ளார்.
அப்படி என்ன விஷயம் என்றால் ‘அஷ்வினை கைது செய்துவிட்டனர், ஏனென்றால் இளம் பெண்களின் மனதை திருடியதற்காக’ என்று ஒரு மீம் வர, அதை ஜாலியாக ஷேர் செய்து அஷ்வின் சிரித்துள்ளார், இதோ..