குக் வித் கோமாளி புகழுக்கு கிடைத்த பரிசு.. மேடையிலேயே நன்கொடையாக யாருக்கு கொடுத்தார் பாருங்க
இன்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி 3 பைனலில் ஸ்ருத்திகா டைட்டில் ஜெயித்தார். அவருக்கு ஐந்து லட்சம் ருபாய் பரிசும், 1 லட்சம் ரூபாய்க்கு ப்ரீத்தியின் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக கொடுக்கப்பட்டது.
ஸ்ருத்திகாவுக்கு கோமாளியாக இருந்த புகழுக்கு ஒரு லட்சம் ருபாய் வழங்கப்பட்டது. நான் எப்போதோ ஒரு நாள் தான் இங்கு வருகிறேன். இதை நான் பாலாவுக்கு கொடுக்கிறேன் என புகழ்கூறினார்.
அவர் ஏழை குழந்தைகளுக்காக உதவுகிறார், அதற்காக இந்த பணத்தை தருவதாக அவர் சொன்னார். அதை கேட்டு ஸ்ருத்திகாவும் தனது பரிசு பணத்தில் ஒரு லட்சம் தருவதாக கூறினார்.
அதன் பிறகு பாலாவுக்கு தனியாக ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அந்த பணத்தையும் சேர்ந்து பெரம்பலூரில் இருக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் படிப்புக்கு வழங்குவதாக பாலா அங்கே மேடையிலேயே அறிவித்தார்.