இப்படி ஒரு டாஸ்க்கா.. குக் வித் கோமாளி 3 இந்த வார முதல் ப்ரொமோ
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் வித்யூலேகா மற்றும் வேட்டை முத்துக்குமார் ஆகியோர் immunity கார்டு ஜெயித்து எலிமினேஷனில் இருந்து தப்பித்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கோமாளிகள் கெட்டப் இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுக்க, அவர்கள் படத்தில் வரும் ஒரு காமெடியன் போல் தான் கோமாளிகள் வருவார்கள். பரத் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கெட்டப்பில் வந்தார்.
அதன் பிறகு போட்டியாளர்களுக்கு பூ போல ஆப்பம் சுட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. ப்ரோமோ இதோ