தொடங்கியது குக் வித் கோமாளி 3! போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியாக கொண்டு செல்ல முடியுமா என அனைவரும் யோசிக்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி ஹிட் ஆகி இருக்கிறது.
கடந்த வருடம் ஒளிபரப்பான இரண்டாம் சீசன் பெரிய ஹிட் என்பதால் அதில் பங்கேற்ற பிரபலங்கள் அனைவரும் தற்போது சினிமாவில் பிஸி ஆகி விட்டனர். இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி மூன்றாம் சீசனின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது.
ஏற்கனவே ப்ரொமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. செட் புகைப்படம் ஒன்றும் இப்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.
ஊர்வசி, அர்ச்சனா, சர்வைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொள்ள போகிறார்கள் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.