குக் வித் கோமாளி சீசன் 3 - சமையலில் பட்டையை கிளப்பிய பாரதி கண்ணம்மா ரோஷினி
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 3. இதன் முதல் வாரம் எப்படி சென்றுள்ளது என்பதை வாங்க பார்க்கலாம்.
இதில் 10 குக் மற்றும் 10 கோமாளிகள் பங்கேற்றுள்ளனர். இதில் கிராண்ட் லான்ச் வாரத்தில் பாலா, சுனிதா, ஷிவாங்கி, ஷக்தி மற்றும் மணிமேகலை சீனியர் கோமாளிகளாக என்ட்ரி கொடுத்தனர்.
இவர்கள் தொடர்ந்து அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், குரேஷி, பரத் மற்றும் ஷீத்தல் ஆகியோர் புதிய கோமாளிகாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.
கோமாளிகள் என்ட்ரியை தொடர்ந்து, நிகழ்ச்சியின் இரு நடுவர்கள், செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவரும் செம மாஸ் என்ட்ரி கொடுத்தனர்.
நடுவர்களை தொடர்ந்து ரோஷினி, மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா, சந்தோஷ் என முதல் ஐந்து குக்ஸ் களமிறங்கினர். முதலில் ஐந்து குக்குகளை கோமாளிகளுடன் இணைத்து சமைக்கவைத்தனர்.
இதில் வித்யுலேகா மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் நடுவர்களிடம் இருந்து டாப் நாட்ச் பாராட்டுகளை பெற்றனர்.
இதனை தொடர்ந்து ரோஷினி, அந்தோணி தாசன் மற்றும் மனோபாலா ஆகியோர் சூப்பர் என்ற கமெண்ட்களை நடுவர்களிடம் இருந்து வாங்கினார்கள்.
முதல் ஐந்து குக்ஸ் சமைத்து முடிக்க, அடுத்ததாக நடிகை ஸ்ருத்திகா மற்றும் ராகுல் தாத்தா என்ட்ரி கொடுத்தனர்.
இத்துடன் இந்த வாரம் முடிவுக்கு வந்தது. 7 குக்ஸ் வந்துள்ள நிலையில், அடுத்தவாரம் மீதமுள்ள 3 குக்ஸ் அம்மு அபிராமி, தர்ஷன் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் என்ட்ரி கொடுப்பார்கள்.
அவர்களுடன் சமையல் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.