குக் வித் கோமாளி 5 இந்த வார சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது, அப்படியொரு ஸ்பெஷல்.. அடடா, செம எபிசோட் போங்க
குக் வித் கோமாளி 5
பல வருடங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரெட் நிகழ்ச்சியாக மாறியது. இதனாலேயே தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.
அதேபோல் கடந்த 2019ம் ஆண்டு மக்கள் எதிர்ப்பார்க்காத வண்ணம் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
சமையல் தெரிந்தவர்கள், அவர்களுக்கு உதவியாக சாப்பிடுவதை தவிர வேறு எதுவும் தெரியாத கோமாளிகள். புதிய கான்செப்டுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த சீசன்கள் ஹிட் அடிக்க இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த 5வது சீசனில் எல்லா விஷயத்தையும் மாற்றிவிட்டார்கள். நிறைய விஷயங்கள் புதியது என்றாலும் கான்செப்ட் பழையது தான்.
புதிய புரொமோ
தற்போது இந்த வாரத்திற்கான ஒரு கலகலப்பு புரொமோ வெளியாகியுள்ளது. அதில் இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களில் கலக்கிய ஷிவாங்கி, பாபா பாஸ்கர், ஷகீலா என பழைய எபிசோட் போட்டியாளர்கள் சிலர் இந்த வாரம் கலந்துகொண்டுள்ளனர்.
அந்த எபிசோடுகளின் புரொமோக்களை பார்க்கும் போது இந்த வார கலகலப்பிற்கு பஞ்சமே இருக்காது என தெரிகிறது.