கிடா விருந்து சுற்றுக்கு தயாரான குக் வித் கோமாளி செட்... ஸ்பெஷல் விருந்தினர் யார் பாருங்க
குக் வித் கோமாளி 5
குக் வித் கோமாளி சிரிக்க ரெடியா பங்காளி என அமர்க்களமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
சமையலும் இருக்கும் அதேசமயம் நிறைய கலாட்டாவும் இருக்கும். இப்படியொரு வித்தியாசமான கான்செப்டில் உருவான இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.
முதல் சீசனிற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக தொலைக்காட்சி அடுத்தடுத்து சீசன்களை ஒளிபரப்பி வந்தது, இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்கள் முதல் கோமாளி என பல விஷயங்கள் புதியது.
கலக்கல் புரொமோ
இந்நிலையில் இந்த வாரத்திற்கான புரொமோ அட்டகாசமாக வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் கிடா விருந்து சுற்று நடக்க இருக்கிறது.
இந்த ஸ்பெஷல் எபிசோடின் சிறப்பு விருந்தினராக வெள்ளித்திரையில் அனைவரின் பேவரெட் அம்மாவாக வலம் வரும் சரண்யா பொண்வண்ணன் கலந்துகொள்கிறார்.
அவர் நிகழ்ச்சிக்குள் நுழைந்ததில் இருந்து போட்டியாளர்கள், கோமாளிகள் என அனைவரிடமும் ஜாலியாக பேசி நிகழ்ச்சியை இன்னும் கலகலப்பாக்கியுள்ளார். இதோ குக் வித் கோமாளி 5 சீசனிற்கான இந்த வார புரொமோ,