குக் வித் கோமாளி 5 முதல் எலிமினேஷன் இவர்தான்.. வெளியில் வந்த பின் உருக்கமான பதிவு
விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவின் ஐந்தாவது சீசன் தொடங்கி நான்காவது வாரத்தை தொட்டு இருக்கிறது. ஷோவில் போட்டியாளர்களாக விடிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, VJ பிரியங்கா, திவ்யா துரைசாமி, இர்பான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் ஷோவுக்கு கெஸ்ட் ஆக நடிகை ராதா வந்திருக்கிறார். மேலும் இந்த வாரம் முதல் எலிமினேஷனும் நடைபெற இருக்கிறது.
எலிமினேஷன் இவர்தான்..
முதல் எலிமிநேஷன் டாஸ்கில் சிறப்பாக சமைக்காத ஷாலின் சோயா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் தான் லிஸ்டில் இருப்பது ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஷாலின் ஸோயா தான் எலிமினேட் ஆகி இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.
நான் பல வருடங்களாக படங்களில் நடித்தபோது கிடைக்காத புகழ் ஒரு ரியாலிட்டி ஷோ கொடுத்துவிட்டது என ஷாலின் ஸோயா இன்ஸ்டாக்ராமில் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.