சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி செய்த விஷயம்.. குக் வித் கோமாளி லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவி மற்றும் சன் டிவிக்கு இடையே எப்போதும் போட்டி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். இரண்டு சேனல்களும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
குக் வித் கோமாளியில் இருந்து விலகிய டீமை கொண்டு தற்போது சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்ற ஷோ தொடங்கப்பட்டு இருக்கிறது. அதை பிரபலப்படுத்தும் விதமாக நடிகர் வடிவேலுவை சன் டிவி கெஸ்ட் ஆக அழைத்து வந்தது. அதற்கு பெரிய வரவேற்பும் கிடைத்தது.
போட்டிக்கு விஜய் டிவி செய்த விஷயம்
தற்போது சன் டிவிக்கு ஈடு கொடுக்கும் விதமாக குக் வித் கோமாளியில் ஒரு டாப் நடிகரை கெஸ்ட் ஆக அழைத்து வந்திருக்கிறது விஜய் டிவி.
விஜய் சேதுபதி தான் அடுத்த வாரம் கெஸ்ட் ஆக வருகிறார். அதன் ப்ரொமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
முன்பெல்லாம் பட ப்ரொமோஷனுக்கு குக் வித் கோமாளிக்கு நடிகர்கள் வருவார்கள். ஆனால் தற்போது காசு கொடுத்து கெஸ்ட்டை அழைத்து வரும் நிலைமைக்கு விஜய் டிவி தள்ளப்பட்டு இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.