நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ
தொகுப்பாளினி டிடி
திறமையான பேச்சு, அழகுடன் கூடிய ஒரு தொகுப்பாளினி என்றால் அது டிடி என்கிற திவ்யதர்ஷினி தான்.
இவர் இப்போதெல்லாம் சின்னத்திரை பக்கம் வருவதில்லை, அது ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு விஷயம் என்றாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளார்.
தனியார் நிகழ்ச்சிகள், பட விழாக்கள் என பெரிய மேடைகளில் இப்போதெல்லாம் அதிகம் காணப்படுகிறார்.
வீடியோ
என்னடா டிடி தொலைக்காட்சி பக்கமே வருவதில்லையே என வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது தொகுப்பாளினி டிடி நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
என்ன நிகழ்ச்சி தெரியுமா, சமையலும் சிரிப்புமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி Grand Finaleகு தான் வந்துள்ளார். அவர் நிகழ்ச்சிக்கு வந்ததும் மிகவும் கலகலப்பாக பேசி அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்துகிறார்.
அவரை நிகழ்ச்சியில் காணப்போகிறோம் என அவரது ரசிகர்களும் செம ஹேப்பியாக உள்ளனர். இதோ டிடி என்ட்ரி வீடியோ,