குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம்
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாகி ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 6ம் சீசன் தற்போது முடிவுக்கு வந்து இருக்கிறது. இதில் ராஜு டைட்டில் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.
டைட்டில் ஜெயித்தபிறது பேசிய ராஜூ 'குக் வித் கோமாளி ஷோ ஸ்கிரிப்ட் என எல்லோரும் சொல்கிறார்கள். அது ஸ்கிரிப்ட் தான். யார் எங்கு சமைக்க வேண்டும், நடுவர் எங்கே அமர வேண்டும் உள்ளிட்டவை ஸ்கிரிப்ட் தான். ஆனால் மற்ற விஷயங்கள் ஸ்கிரிப்ட் இல்லை என்பதை மட்டும் விமர்சிப்பவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்' என ராஜு பேசினார்.
ஷபானா - ரன்னர்
ராஜு டைட்டில் ஜெயித்த பிறகு அதன் பின் தான் ரன்னர் அப் யார் என்பது அறிவிக்கப்பட்டது. ஷபானா தான் ரன்னர் அப் ஆக தேர்வானார். அதை ஷபானா அவரது கணவர் உடன் கொண்டாடினார்.
ஷபானாவுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.