குக் வித் கோமாளி சீசன் 6ன் முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா.. இதோ பாருங்க
குக் வித் கோமாளி 6
ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக பல மாற்றங்களை குக் வித் கோமாளி சந்தித்திருந்தாலும் கூட அந்த நிகழ்ச்சிக்கு தனி வரவேற்பை மக்கள் தருகிறார்கள்.
குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. நேற்று ஒளிபரப்பான எபிசோடில் உமைர் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேறினார். அது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.
இதை தொடர்ந்து இன்று டிக்கெட் டு பினாலே சுற்று நடைபெற்றது. இதில் ராஜு, ஷபானா, பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நந்தகுமார் என ஐந்து போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நடந்தது.
முதல் பைனலிஸ்ட்
இந்த ஐவரில் நன்றாக சமைத்து நடுவர்களிடம் இருந்து நல்ல மதிப்பெண்களை பெற்ற ஷபானா டிக்கெட் டு பினாலே சுற்றை வென்றுள்ளார். இதன்மூலம் அவர் குக் வித் கோமாளி சீசன் 6ன் முதல் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேரடியாக பைனலுக்கு சென்றுள்ளார் ஷபானாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.