குக் வித் கோமாளி தீபாவா இது..! ஆள் அடையாளமே தெரியவில்லயே.. ஷாக்கிங் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியின் ப்ளாக் பஸ்டர் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் சீசனை விட குக் வித் கோமாளி சீசன் 2, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.
இதில் கலந்துகொண்ட 9 போட்டியாளர்களில் ஒருவர் தான், நடிகை தீபா. இவர் வெள்ளித்திரையில் வெளியான பல படங்களில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும், தீபா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரையில் நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை தீபாவின், இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் 'நம்ம தீபா அக்காவா இது' என ஷாக்காகி கேட்டு வருகிறார்கள். மேலும், பழைய புகைப்படமாக இருந்தாலும், ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
