குக் வித் கோமாளி நடிகர் காளையன் இப்படி ஒரு தொழில் செய்கிறாரா? ரசிகர்கள் ஷாக்
காளையன்
ஜிகர்தண்டா, சுல்தான், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் காளையன். அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4 ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே எலிமினேட் ஆகி சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்து அவர் வைல்டு கார்டு சுற்றுக்கு மீண்டும் குக் வித் கோமாளிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்
படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தாலும் காளையன் சொந்தமாக வேறொரு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அவர் முறுக்கு உள்ளிட்ட ஸ்னாக்ஸ் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறாராம். அதில் மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்களாம். அவரது நிறுவனத்தின் முறுக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு செல்வதாகவும் கூறி இருக்கிறார்.
ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் இரண்டு பேர் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பம்