ஹீரோ ஆனார் புகழ்.. வெளிநாட்டில் ஷூட்டிங்! குக் வித் கோமாளியில் வெளியிடப்பட்ட போஸ்டர் இதோ
குக் வித் கோமாளி மூலமாக பிரபலம் ஆன நடிகர் புகழ் தற்போது படங்களில் காமெடியனாக மட்டும் நடித்து வந்த நிலையில் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
புகழ் ஹீரோவாகும் Mr Zoo Keeper
வலிமை, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் சின்ன ரோல்களில் மற்றும் தோன்றிய புகழ் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டர் குக் வித் கோமாளி ஷோவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
Mr Zoo Keeper என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்று மார்ச் 20ம் தேதி முதல் ஊட்டியில் தொடங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் படபிடிப்பு நடைபெற இருக்கிறது.
பிலிப்பைன்ஸில் ஷூட்டிங்
இந்த படத்தில் நிஜமான புலி உடன் ஷூட்டிங் நடக்கும் என்பதால் இந்தியாவில் அதற்கு அனுமதி இல்லை என்பதால் தான் பிலிப்பைன்ஸில் ஷூட்டிங் நடக்கிறது.
இந்த படம் பற்றி பேசிய புகழ் தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ள குக் வித் கோமாளி ஷோ தான் காரணம் என கூறி இருக்கிறார்.