குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் ரக்ஷன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
குக் வித் கோமாளி
தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதை தொடர்ந்து தற்போது 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், தொடர்ந்து அதற்கான ப்ரோமோ வெளியாகி வருகிறது. முதலில் செப் வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார் என கூறி ப்ரோமோ வெளியானது.
இதன்பின், கோமாளிகளுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் புதிய கோமாளியாக ராமர் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருவரும் இணைந்து தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள் என தெளிவாக தெரிகிறது.
ரக்ஷன் சம்பளம்
கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் ரக்ஷன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது பயணத்தை துவங்கிய ரக்ஷன் இன்று வெள்ளித்திரையில் நடிகராகவும் மாறிவிட்டார்.
இந்த நிலையில், தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள தொகுப்பாளர் ரக்ஷன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோட்-க்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்துள்ளாராம்.
இது கடந்த சீசன் விவரம் என கூறப்படுகிறது.
புதிதாக துவங்கவுள்ள குக் வித் கோமாளி சீசன் 5-காக ரக்ஷன் வாங்கவுள்ள சம்பளம் குறித்து இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
