அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 5.. லீக்கான போட்டியாளர்களின் லிஸ்ட்
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த நான்கு சீசன்களாக மாபெரும் வெற்றியை கண்டுள்ள குக் வித் கோமாளியின் 5வது சீசன் எப்போது ஆரம்பம் என்று கேள்வி எழுந்துள்ளது.
ஒரு பக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 இல்லை என்று கூறினாலும், சமீபகாலமாக வெளிவரும் தகவல்களில் குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் துவங்கவுள்ளது என கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை துவங்குவது தான் விஜய் டிவியின் வழக்கம். ஆகவே விரைவில் குக் வித் கோமாளி ஆரம்பமாக இருக்கிறது என்கின்றனர்.
வழக்கம் போல் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு நடுவர்களாக இருக்க விஜே ரக்ஷன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள். அதே போல் சில கோமாளிகள் சீசன் 5ல் தொடருவார்கள் என்றும், சில புதிய கோமாளியின் வரவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
போட்டியாளர்களின் பட்டியல்
இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ன் போட்டியாளர்கள் லிஸ்ட் தற்போது லீக்காகியுள்ளது. விஜய் டிவி தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடந்து வரும் பிரபலங்களின் பட்டியல் தான் லீக்காகியுள்ளது என கூறப்படுகிறது. அது எந்தெந்த பிரபலங்கள் என்று பார்க்கலாம் வாங்க..
நடிகை வடிவுக்கரசி
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தீபா வெங்கட்
தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா
நடிகை மாளவிகா மேனன்
பிக் பாஸ் 7 நடிகர் விஷ்ணு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் 'ஹேமா'
நடன இயக்குனர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா
இவர்கள் தான் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
